மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை 'தற்செயலாக’ ஆனால் தீவிரமாக தீண்டிச்செல்வதே மிகச் சிறந்த கதை - Jeyamohan
பறவையை நேர் முன்னால், அது நம்மை நோக்கி முகத்திற்கு நேராக பறந்து வருவதை பார்ப்பது கிளர்ச்சியான அனுபவம். - Jeyamohan
இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும் - Jeyamohan
நான் நினைவறிந்த நாள் முதலே என் விழிகள் எட்டும் தொலைவுக்கு அப்பாலுள்ளவற்றை கற்பனையில் கண்டுகொண்டிருந்தவன் - Jeyamohan
உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்றால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது. - Jeyamohan